உலகம்

புறாவின் முதுகில் மாட்டி போதைப் பொருள் கடத்தல்!!

        104

கனடாவில் புறாவின் முதுகில் போதை பொருளைக் கட்டி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாட்ஸ்ஃபார்ட் ( Abbotsford) சிறையில் கைதிகள் விளையாடி, ஓய்வெடுத்து காற்று வாங்கும் பகுதியில் புறா ஒன்று தன் முதுகில் குட்டி பையை சுமந்தபடி அங்கும் இங்கும் பறந்து யாரையோ தேடியது. இதைக் கண்ட சிறைக்காவலர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பின் அதனைப் பிடித்து அதில் இருந்த பையை அகற்றி சோதனையிட்டனர். அதில் 30 கிராம் எடையுள்ள கிறிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதை பழக்கியது யார்? அனுப்பியது யார்? யாரைத் தேடி வந்தது? என விசாரணை நடைபெறுகிறது.
 


Share :        

VISITORS : 349032