சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் நிதி திரட்டி கல்வி சீர் வழங்கினர். அண்டக்குடி அடுத்த புதூரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு தேவையான கணினி, LED டிவி, டிஜிட்டல் கரும்பலகை உள்ளிட்டவற்றை 2 லட்சம் ரூபாய் செலவில் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.