இந்தியா

பொய்யான செய்திகளை பரப்பியதால் 6 யூடியூப் சேனல்களை முடக்கம்

        82

உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியதாக 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நடைமுறைகள், அரசின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் சேனல்கள் மீது புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விசாரணை நடத்தியது. அதில் 6 யூடியூப் சேனல்களும் பொய்யான செய்திகளை பரப்பியது உறுதியானதையடுத்து அவற்றை மத்திய அரசு முடக்கியது.


Share :        

VISITORS : 349070