காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் சேர்ந்து விடுங்கள், இல்லையென்றால் புல்டோசர் தயாராக இருக்கிறது என்ற மத்திய பிரதேச பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அம்மாநில அமைச்சரான மஹேந்திர சிங் சிசோடியா பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவராக பாஜக பக்கம் வர முயற்சியுங்கள், இல்லையென்றால் முதலமைச்சரின் புல்டோசர் தயாராக இருக்கிறது’ எனக் கூறவே, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
அவரது இந்த பேச்சு, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.