உலகம்

சார்ஜ் போட்டு வைத்திருந்த ஐபோன்.. தீப்பிடித்து எரிந்து நாசம் உரிய பதிலளிக்காத ஆப்பிள் நிறுவனம்

        70

அமெரிக்காவில் சார்ஜ் போட்டு வைத்திருந்த ஐபோன் திடீரென தீப்பிடித்து வெடித்த சம்பவம் அரங்கேறியது. சின்சினாட்டியில் ஜெனிபர் என்பவரது வீட்டில் இரவு தூங்கும் போது ஐபோனில் சார்ஜ் போட்டு வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அந்த ஐபோன் தீப்பிடித்து வெடித்தது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தீப்பிடித்து எரிந்தது 2010ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஐபோன் 4 செல்போன் என்ற நிலையில், அந்த பெண் ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, பழைய போன் என்பதால் தீப்பிடித்திருக்கும் என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஆய்வு செய்வதற்காக அந்த செல்போனை அனுப்பி வைக்க ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


Share :        

VISITORS : 348983