சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதே போன்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தா, ஆயூர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.