அரசியல்

தமிழ் மொழி, இலக்கியம் மிகவும் பழமையானவை - ஆர்.என்.ரவி

        59

தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்துடன் தான் இருப்பார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சிவில் தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆர்.என்.ரவி, தமிழ் மொழியும், அதன் இலக்கியமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என புகழாரம் சூட்டினார். இதனிடையே காசி தமிழகம் என்ற புத்தகத்தை அதிகாரிகளுக்கு ஆளுநர் வழங்கினார்.


Share :        

VISITORS : 348943