Big Stories

பஞ்சமுக வாத்தியத்தை வாசிக்கும் பெண்பெரும் பாக்கியமாக கருதுவதாக நெகிழ்ச்சி ..

        65

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் முறை சோழர் காலத்தில் இருந்து காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இக்கோவிலில், தினமும் காலை 6 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின்போது இந்த பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

இதனை திருவாரூரைச் சேர்ந்த சுமதி என்பவரின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வாசித்து வருகின்றனர். இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தாலும், பல தலைமுறையாக முன்னோர்கள் வாசித்த இந்த பஞ்சமுக வாத்தியத்தின் பெருமையை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து, அதனைச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பஞ்சமுக வாத்தியத்தை நான்கு தலைமுறைக்கு முன் தம்பியின் என்பவர் வாசித்துள்ளார். அவரைத் தொடர்ந்து சங்கரமூர்த்தி என்பவரும், செல்வராஜ் என்பவரும் வாசித்துள்ளனர். இதில் செல்வராஜ் என்பவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் அவருடை இளைய மகள் சுமதி என்பவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தினந்தோறும் பஞ்சமுக வாத்தியத்தையும், சுத்த மத்தளத்தையும் கோவிலில் நடைபெறும் பூஜையின் போது வாசித்து வருகிறார். அவர் கோவிலுக்கு செல்ல முடியாத நேரங்களில் அவருடைய மகள் சுஷ்மா சங்கரி வாசிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுமதி, நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பதை பிறவி பயனாகவும், பெரும் பாக்கியமாகவும் கருதுவதாக தெரிவித்தார். அத்தோடு தனது தலைமுறையின் முதல் பெண்ணாக வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்


Share :        





VISITORS : 348971