சினிமா

விஜய்-க்காக நடித்தேன்! நடிகை ராஷ்மிகா அதிரடி!

        76

நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே வாரிசு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகாவிற்கு கதாபாத்திரம் பெரிதளவில் இல்லை என்றும், 2 பாடல் காட்சிகளில் நடனமாடும் கதாநாயகியாக மட்டுமே நடித்ததாக பல விமர்சனங்கள் எழுந்தது. இந்தநிலையில், விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, எல்லா வகையான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அந்த அடிப்படையில் வாரிசு படத்தில் நடித்ததாக கூறினார். மேலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் விஜய் உடன் நடித்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


Share :        

VISITORS : 348968