தொழில்நுட்பம்

இஸ்ரேலில் முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி நிறுவனம்..

        172

பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் சரிவுக்கு மத்தியிலும், இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை அதானி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. சரக்கு கப்பல்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை, 9 ஆயிரத்து 809 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டார்.
 


Share :        

VISITORS : 790839