கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு ரயில் மூலம் சென்றார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதிசெய்யும், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்வண்டியிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து, பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது என்று டுவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்...