பிரியங்காவுக்கு 2-வது திருமணம் 
சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவுக்கு 2-வது திருமணம்.. வசி என்பவரை கரம் பிடித்துள்ளதாக தகவல்

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Srini Vasan

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.