Salman khan 
சினிமா

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் BATTLE OF GALWAN

எந்த ஒரு சினிமா மிகைப்படுத்துதலும் வரலாற்றை மீண்டும் எழுதவோ அல்லது சீனாவின் உறுதியை அசைக்கவோ முடியாது

Manigandan Raja

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் BATTLE OF GALWAN படத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.! கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்திய இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், சீனா அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.! பாலிவுட் படங்கள் எப்போதுமே அதிகளவில் பொழுது போக்கு சித்தரிப்பை வழங்குவதாக கூறியிருக்கும் சீனா, எந்த ஒரு சினிமா மிகைப்படுத்துதலும் வரலாற்றை மீண்டும் எழுதவோ அல்லது சீனாவின் உறுதியை அசைக்கவோ முடியாது என தெரிவித்துள்ளது.!