திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். போர்ச்சுகலில் கணவர் ராஜ் நிடிமோருவுடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா, அதற்கு முன்னதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பச்சை நிற வெல்வெட் ஆடையில் மினுமினுக்கும் சமந்தாவுடன் நடிகை தமன்னாவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.