குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்கவுள்ள நிலையில், மிஸைல் மேன் ஆப் இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயோபிக் படம் அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.