”போர் தொழில்” பட இயக்குநர் விக்னேஷ் ராஜா- தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 3 மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.