ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தில், கதைச் சுருக்கத்தை சொல்லும் வாய்ஸ் ஓவருக்கு இயக்குநர் வெற்றி மாறன் குரல் கொடுத்துள்ளார். சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் இந்த பங்களிப்புக்காக படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.