சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல இயக்குநர் ராஜமவுலியின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மே 1 ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் பக்கத்தில், திரைப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும், தொடக்கத்திலிருந்து இறுதிவரை கவனத்தைக் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் அபிஷன் ஜீவிந்தின் எழுத்து மற்றும் இயக்கம் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார்.