Bhavatharani 
சினிமா

மகளின் நினைவாக மகளிர் இசைக்குழுவை தொடங்கிய இளையராஜா

பவதாரணியின் பெயரில் "பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா" என்ற பெண்களுக்கான இசைக்குழுவை தொடங்கிய இளையராஜா

Web Team

மறைந்த தமது மகள் பவதாரணியின் பெயரில் "பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா" என்ற பெண்களுக்கான இசைக்குழுவை தொடங்கிய இசையமைப்பாளர் இளையராஜா, திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் இளம்பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

"allgirlsorchestra@gmail.com" என்ற மெயிலில் விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை அனுப்பலாம் என பதிவிட்டுள்ளார். நேருக்கு நேர், பிரண்ட்ஸ், மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் பாடல்களை பாடி பிரபலமான பவதாரணி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.