சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் "மன சங்கர வர பிரசாத் கரு" திரைப்படத்தின் "மெகா விக்டரி மாஸ்" என்கிற புதிய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், வெங்கடேஷ், கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார்.