ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான “ஹோம்பவுண்ட்” எனும் இந்தி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டார், ஜான்வி கபூர், விஷால் ஜோத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் அன்செர்டைன் ரிகார்ட் பிரிவில் திரையிடப்பட்டு 9 நிமிட கைதட்டல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.