நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். 75ஆவது பிறந்தநாளை ஒட்டி திருப்பதி மலையில் தங்கியவர் இன்று அதிகாலையில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமியை வழிபட்டார். அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்துவிட்டு சென்றார்.