கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம், வரும் 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஜே.கே.சந்துரு இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம், போதுமான வரவேற்பை பெறாத நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.