Mollywood director 
சினிமா

மலையாள இயக்குநர் பி.டி. குஞ்சு முகமது மீது பா*யல் புகார்

சர்வதேச திரைப்பட விழா தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த பெண், கடந்த மாதம் ஹோட்டலில் தங்கியிருந்த போது பி.டி.குஞ்சு முகமது பாலியல் தொல்லை

Web Team

மலையாள இயக்குநரும் முன்னாள் சுயேச்சை எம்எல்ஏவுமான பி.டி.குஞ்சு முகமது (( PT Kunju Muhammed))மீது கேரள போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள சர்வதேச திரைப்பட விழா தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த பெண், கடந்த மாதம் ஹோட்டலில் தங்கியிருந்த போது பி.டி.குஞ்சு முகமது பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண் முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. 1993 ஆம் ஆண்டு மக்ரிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கர்ஷோம், பரதேசி, வீரபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.