நடிகர் சூர்யாவின் 46வது படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதனை பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் தொடங்கி வைத்தார்.
வெங்கி அட்லுரி இயக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார் மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.