தமிழ் சினிமாவை போன்று தெலுங்கு சினிமா உலகில் ஒற்றுமை இல்லை என இசையமைப்பாளர் தமன் வெளிப்படையாக கூறினார். அனிருத்துக்கு தெலுங்கு திரைப்படங்களில் எளிதாக வாய்ப்பு கிடைப்பதை போன்று தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றார். தமனின் இந்த பேச்சு தெலுங்கு சினிமா உலகில் பேசுபொருளாகியுள்ளது.