Rajini 173 
சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தின் அப்டேட்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Web Team

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’. திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

இதனிடையே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.