இயக்குநர் ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ரசிகர்கள் பிரமாண்டத்தை எதிர்பார்க்கலாம், ஆனால் வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என கூறினார். இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.