Vishvampara 
சினிமா

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் 'விஸ்வம்பரா' கிராபிக்ஸ் காட்சிகள்..! ரூ.75 கோடி செலவில் விஸ்வம்பரா படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வம்பரா படத்தில் உள்ள ஒவ்வொரு கிராஃபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வம்பரா படத்தில் உள்ள ஒவ்வொரு கிராஃபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ள இந்த படத்தில் 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா, சிரஞ்சீவியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சுமார் 75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.