மாவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவே பயம் என்றும், அது முதல் பாகத்தின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்றும் கூறினார். மாவீரன் படத்தின் கதை தனித்துவமானது என்பதால், அதை முயற்சிக்கலாம் எனக் கூறினார்.