லண்டனில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஏழை மீனவக் குடும்பத்தினரை ஏமாற்றி 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது குமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்தூர் மற்றும் சின்னத்துறை மீனவ கிராமங்களை சேர்ந்த 7 குடும்பத்தினர், கோவையை சேர்ந்த ஜெயபாரதி, அவரது கணவர் பிரகாஷ் ஜெயராஜன் மற்றும் தோழி லாவண்யா ஆகியோர் மீது புகார் அளித்தனர்.