வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செம்மரம் வெட்டுவதற்காக அரசு பேருந்தில் ஆந்திராவிற்கு சென்ற 10 பேரை கைது செய்து, தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வேலூரில் இருந்து கேஜிஎப் வரை செல்லும் அரசு பேருந்தை, செதுக்கரை பகுதியில் வழிமறித்து குடியாத்தம் போலீசார் சோதனையிட்டனர்.
அதில் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 10 பேர் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா சென்றது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.