VLR Small boy death 
மாவட்ட செய்திகள்

விஷ பூச்சி கடித்து 13 வயது சிறுவன் உயிரிழப்பு வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் பலி

வேலூர் அருகே அருகம்புல் அறுக்க சென்ற 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் அடையாளம் தெரியாத விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Web Team

வேலூர் அருகே அருகம்புல் அறுக்க சென்ற 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் அடையாளம் தெரியாத விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருபாட்சிபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது வாய் பேசமுடியாத மகன் இரவு நேரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் அறுக்க சென்றபோது விஷப்பூச்சி தாக்கியுள்ளது.

வலி தாங்கமுடியாமல் கதறிய சிறுவனை மீட்டு அரசு மருத்துமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.