New Project - 2025-05-28T203858 
மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் 14 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி... 6 வது நாளில் சென்னையை சேர்ந்த இரு அணிகள் மோதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 14 வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 14 வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆறாவது நாள் போட்டியில் சென்னை INTEGRAL COACH FACTORY ஆண்கள் அணியும், சென்னை இந்தியன் வங்கி ஆண்கள் அணியும் மோதின.

இதில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.