18 
மாவட்ட செய்திகள்

இளைஞரை கத்தியால் குத்திய 3 பேர் கைது.. தப்ப முயன்ற இளைஞர் தவறி விழுந்து காலில் முறிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா வந்த இளைஞர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, ஒருவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா வந்த இளைஞர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, ஒருவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் அரவிந்தன் மற்றும் நிசார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தப்பி சென்ற சூர்யாவை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், தலைமறைவாக இருந்த சூர்யாவை போலீசார் பிடித்த போது தப்பி செல்ல முயன்ற நிலையில், தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.