MYD Jewell theft 
மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்கநகைகள் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Web Team

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்கநகைகள் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மாங்கனாம்பட்டையைச் சேர்ந்த தஸ்லீம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை , பணம் கொள்ளையடித்து சென்றதாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.