Tirupur 
மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த 38 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா கடத்தி வந்து தனது நண்பர் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Web Team

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 இளைஞர்களை கைது செய்தனர். எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்த அவிநாசி பகுதியை சேர்ந்த நவநீதன் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தனது நண்பர் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.