19 
மாவட்ட செய்திகள்

அணையிலிருந்து விநாடிக்கு 4,151 கனஅடி நீர் வெளியேற்றம்..

கோவை ஆழியார் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் காளியப்பகவுண்டன்புதூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

Web Team

கோவை ஆழியார் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் காளியப்பகவுண்டன்புதூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 118.90 அடியை எட்டியதையடுத்து, ஆற்றிலிருந்து விநாடிக்கு 4151 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதை அடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காளியப்பகவுண்டன்புதூரில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராத மக்கள் ஆற்றை கடந்து சென்றனர்.