தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 5 குடும்பங்களை மட்டும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கும்மனூர் ஊராட்சிக்குட்பட்ட கூத்தாண்ட அள்ளி கிராமத்தில் திருஞானசம்பந்தன், மகேந்திரன், வெங்கடேசன், மாதப்பன், குமரவேல் ஆகிய 5 பேரின் குடும்பத்திற்கும், அவர்களது பங்காளி முறையான மல்லன் என்பவரது குடும்பத்திற்கும் சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.
ஊர் தலைவரான பூங்காவனம், முத்துசாமி, விஜி, முனிராஜ், நாகமணி, பூபதி, வேலாயுதம், அண்ணாமலை ஆகியோர், 5 குடும்பத்தினரையும் அழைத்து பிரச்சனையை தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்ச ரூபாய் முன்பணம் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 5 குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.