Sivagangai 
மாவட்ட செய்திகள்

குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம்... கனிம வளத்துறை RI, VAO தற்காலிக பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கமும், வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Web Team

இந்த விபத்தில் பாறை சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணையில் உரிமம் காலாவதியான பிறகும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.