ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஜெயவீர காளியம்மன் கோவிலில் 702 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
கடம்பாகுடி கண்மாய் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஸ்ரீ ஜெயவீர காளியம்மன் கோவிலின் 44வது ஆண்டு திருவிழாவை கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.