புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆட்டுக்குட்டியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சொக்கநாதபட்டியை சேர்ந்த பாக்கியம், மேய்ச்சலுக்காக ஆடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றபோது, அங்கிருந்த மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கியது.