கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலிடம் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி, இடைவேளை நேரத்தில் கழிப்பறைக்கு சென்ற போது அங்கிருந்த ஹிந்தி ஆசிரியரும் முன்னாள் ராணுவ வீரருமான சங்கர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.