VLP Elephant damaged 
மாவட்ட செய்திகள்

வால்பாறை அருகே பள்ளிக்குள் புகுந்த யானைக்கூட்டம்

அச்சமூட்டும் யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Web Team

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குள் புகுந்த காட்டு யானைகள் கதவுகளை இடித்து தள்ளி, பொருட்களை உடைத்து துவம்சம் செய்துள்ளன.

8 யானைகள் வந்ததாக கூறப்படும் நிலையில், வகுப்பறைகளில் சேர், டேபிள், ஸ்மார்ட் போர்டு, சத்துணவுக் கூடம் உள்ளிட்டவற்றை சூறையாடியுள்ளன. அச்சமூட்டும் யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.