tiruchendur 
மாவட்ட செய்திகள்

முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவு 11 மணி முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

Web Team

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை ஒட்டி, அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வருப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை ஒரு மணிக்கே நடை திறக்கப்பட்டதால், நள்ளிரவு 11 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.