TUT Feeding room 
மாவட்ட செய்திகள்

செந்தூர் முருகன் கோவிலில் பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறை

பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறையை உடனடியாக திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டிக் கிடப்பதால், தாய்மார்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து கோவில் பணியாளர்களிடம் கேட்ட போது அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. பூட்டிக் கிடக்கும் பாலூட்டும் அறையை உடனடியாக திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.