KNC Lorry broken 
மாவட்ட செய்திகள்

இரும்பு தகடுகளை ஏற்றும் போது இரண்டாக உடைந்த லாரி

2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடைந்த லாரியை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

Web Team

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்றி வரப்பட்ட இரும்பு தகடுகளை கனரக வாகனத்தில் ஏற்றும் போது, அந்த லாரி இரண்டாக உடைந்தது. இதனால் காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் செல்லும் சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடைந்த லாரியை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.