21 
மாவட்ட செய்திகள்

கனமழையின் போது சாலையில் முறிந்து விழுந்த மரம் .. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. மானாமதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இரவு கனமழை பெய்தது. அப்போது மானாமதுரை- சிவகங்கை செல்லும் சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால், இரு மார்க்கத்திலும் வாகனங்கள் நகருக்குள் வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயின.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

மானாமதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இரவு கனமழை பெய்தது. அப்போது மானாமதுரை- சிவகங்கை செல்லும் சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால், இரு மார்க்கத்திலும் வாகனங்கள் நகருக்குள் வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயின.

இதனையடுத்து, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.