ஈரோடு பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் டீசல் வெளியேறி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
பூனேவில் இருந்து பேட்டரிகளை லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரி, ஈரோடு பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்தது.
டீசல் வெளியேறி தீ பற்றியதில், லாரிக்குள் இருந்த பேட்டரிகள் கொழுந்துவிட்டு எரிந்தது. பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதமான நிலையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.