Pallivasal vdn 
மாவட்ட செய்திகள்

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்

கத்திக் கூச்சலிட்ட அந்த பெண்ணை ,சிறிய கத்தியை கொண்டு அஜீஸ் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

Web Team

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் ஒருவர், அவரை கத்தியால் குத்தியுள்ளார். நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத்தாக பணியாற்றும் அப்துல் அஜீஸ் என்பவரிடம் 22 வயது இளம் பெண் ஒருவர், உடல் நிலை சரியில்லை எனக் கூறி மந்திரிக்கச் சென்றதாக தெரிகிறது. அப்துல் அஜீஸ் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், கத்திக் கூச்சலிட்ட அந்த பெண்ணை ,சிறிய கத்தியை கொண்டு அஜீஸ் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள், அஜீஸை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.